2025 மே 26, திங்கட்கிழமை

‘சட்ட நடவடிக்கை எடுப்பேன்’

Yuganthini   / 2017 மே 14 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

“மட்டக்களப்பு - கர்பலா நகரில், பொதுமக்கள் வாழ்ந்து வந்த 15 ஏக்கர் காணி சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட 312 பேருக்கும் நீதி பெற்றுக்கொடுப்பேன்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடனான சந்திப்பு, நேற்று (13) இடம்பெற்றபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இந்தக் காணி தொடர்பான முழு விவரங்களும் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் உரிய சட்டத்தரணிகளிடம் ஆலோசனைகளைப் பெற்று  சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மக்களிடம் முதலமைச்சர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X