Suganthini Ratnam / 2016 நவம்பர் 04 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கையில் 18 சதவீதமான குழந்தைகள் மந்த போஷனையுடையதாகப் பிறக்கின்றன என யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி போலா புலன்ஸியா தெரிவித்தார்.
காத்தான்குடி சுகாதார வைத்திய அலுவலகத்துக்கான புதிய கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், 'இலங்கையில் பிறக்கின்ற குழந்கைளில் 18 சதவீதமான குழந்தைகள் மந்த போஷனையுடைய குழந்தைகளாக பிறக்கின்றனர்.
இந்த குழந்தைகளின் பேஷாக்கை விருத்தி செய்வதற்காக அவர்களை ஆரோக்கியமுள்ள குழந்தைகளாக மாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து தாய்,சேய் நலன் அபிவிருத்தி Nலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
தாய், சேய் நலனை கருத்திற்கொண்டு நாம் ஆயிரம் நாட்கள் தாய் மற்றும் குழந்தை ஆகியோருடன் தொடர்ந்திருக்கின்றோம். இலங்கையைப் பொறுத்த வரைக்கும் போஷாக்கு குறைந்த நிறை குறைந்த குழந்தைகளின் பிறப்பானது மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இவர்களுக்கான போஷாக்கை அதிகரிப்பதற்காக நாம் இவ்வாறான சுகாதார நிலையங்களுக்கூடாக நாம் எமது உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான பல திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகின்றோம்.
2000ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இலங்கையில் சுகாதாரம், கல்வி மற்றும் போஷாக்கு போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதில் யுனிசெப் நிறுவனம் உழைத்து வருகின்றது. இப்பிரதேசத்தில் கர்ப்பிணிகளினதும் குழந்தைகளினதும் போஷாக்கு தொடர்பான வேலைத்திட்டத்திற்கும் இந்த கட்டடம் பெரிதும் உதவியாக இருக்கும்' என அவர் தெரிவித்தார்.

44 minute ago
52 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
52 minute ago
6 hours ago
21 Dec 2025