Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
வாலிபப் பருவத்திலுள்ள மாணவர்களில் 26 சதவீதமானோர் மதுபானம் மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஸ
ஜே.தேவநேசன் தெரிவித்தார்.
மதுபானம் மற்றும் புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஜோசப் பரராஜசிங்கம் நினைவு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (16) நடைபெற்றது.
பல்லூடகத் திரையில் மாணவர்களுக்கு விளக்கமளித்த அவர், 'போதைப்பொருள்; பாவிப்போர் எப்போதும் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்துக்கு உள்ளாகுவர். இலங்கையில் சிகரெட் பாவனையால் வருடத்துக்கு 20,000 பேர் இறக்கின்றனர். அதுபோல் மதுபானப் பாவனையால் வருடத்துக்கு 10,000 முதல் 15,000 பேர்வரை இறக்கின்றனர்.
எதிர்காலத் தலைவர்களாக திகழவுள்ள மாணவர்களாகிய நீங்கள், சுகாதாரமிக்க மாணவர்களாக வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
50 minute ago
1 hours ago