2025 மே 26, திங்கட்கிழமை

‘சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்’

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

வட - கிழக்கில் உள்ள தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் பொலிஸ் யுவதிகள் பொலிஸ் சேவைக்குள் இணைத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு, சிவில் பிரஜைகள் பொலிஸ் இணைப்பகத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரட்ணம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இது தொடர்பில், இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வட-கிழக்கில் தமிழ் மொழி பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது. குறிப்பாக பொலிஸில் உள்ள தமிழ் பேசும் யுவதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

கடந்த கால நிலைமைகள் காரணமாக பொலிஸ் சேவையில் தமிழ் பேசும் இளைஞர்கள் யுவதிகள் இணைவது மிகவும் குறைவான நிலையிலேயே இருந்து வருகின்றது.

இதன்காரணமாக வட-கிழக்கில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியை அமுல்படுத்துவதில் சவால்கள் இருந்துவருகின்றது.

இந்த நிலையில் வட-கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழில்வாய்ப்பு சந்தர்ப்பத்துடன் தமது பகுதியை பாதுகாக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.

வட-கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமிழில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த குறைகளை நிவர்த்திசெய்ய வேண்டுமானால் தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் பொலிஸ் திணைக்களத்தில் இணையவேண்டும்” என்றார்.

இன்று அரச சேவையினை எதிர்பார்த்துக் கொண்டுள்ளவர்களுக்கும் சிறந்த சந்தர்ப்பமாகும். சாதாரண தர சித்தியுடன் அரசசேவையில் இணையும் சந்தர்ப்பமாக பொலிஸ்சேவை இருந்துவருகின்றது.

இதனை வட- கிழக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் பயன்படுத்தி பெருவாரியாக இணைந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X