Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெரும்பான்மையினத் தரப்புக்கும் தமிழர் தரப்புக்குமிடையில் சமூக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழு உறுப்பினர்; கே.விஜயகுமார் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு முன்வைக்கும் நடவடிக்கை, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ் மக்களின்; அடிப்படை பிரச்சினைகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணி கையளிப்பு விவகாரம், இராணுவ மயப்படுத்தல் விவகாரம்;, அரசியல் கைதிகள்; விவகாரம், மீள்குடியேற்றம் போன்ற பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டுமென்று இனங்காண்பதன் மூலம் தமிழர் தரப்பின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.
இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழர் தரப்புக்கும் பெரும்பான்மையினத்; தரப்புக்குமிடையில் சமூக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தச் சமூக ஒப்பந்தமும் ஐக்கிய நாடுகள் சபை அல்லது இந்தியா, அமெரிக்கா ஆகியவற்றின் நடுநிலைமை வாய்ந்த மூன்றாம் தரப்;பின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்புத் திட்டங்கள் முன்மொழியப்பட வேண்டும்' என்றார்.
'தற்போது எமது நாட்டில் நிலவும் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படை தெரியாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதற்கு போக முடியாது. அடிப்படை பிரச்சினைக்கான காரணம் என்ன என்பதை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .