2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 13 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'சர்வதேசத்திடம் நாம் வல்லமையுடன் நியாயம் கேட்கும் சந்தர்ப்பங்கள் உருவாகி வருகின்றன. ஆனால், சிலர் சங்கடங்களை ஏற்படுத்துகின்றார்கள்'  எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

'மேலும், சர்வதேசத்திடம் நாம் நியாயம் கேட்கும்போது, நியாயத்தைக் கூறும் கடப்பாடு சர்வதேசத்துக்கு உண்டு' எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு விடியல் சமூக மேம்பாட்டுக்கான மன்றத்தின் ஏற்பாட்டில்  சர்வதேச மகளிர் தின நிகழ்வு, ஏறாவூர் மாஞ்சோலை மணி மண்டபத்தில் ஞாயிறு (12) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'வடக்கு,  கிழக்கு மாகாணங்கள் இணையாத எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் பேசத் தயாரில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தீர்வு கிடைக்குமாயின், அதை நாம் ஏற்றுக்கொள்வோம்' என்றார்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலர் தற்போது விமர்சிக்கின்றார்கள் என்பதுடன்,   கூட்டமைப்புக்கு பல வழிகளிலும் திட்டமிட்டுச் சேறு பூசும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

இந்த அரசாங்கம் ஏமாற்றினால்,  எம்மை நாமே ஆள வேண்டிய தீர்வை எங்களுக்குத் தர வேண்டும் என்றும்  சர்வதேசத்திடம்  நாம் கேட்க முடியும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .