Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மதம் என்பது மதம் பிடித்ததாக மாறக்கூடாது.அது மனித நேய செயற்பாடாக மாறவேண்டும்.அந்த நிலையில் சரஸ்வதியை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சரஸ்வதி சிலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலையின் அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ் கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பொறுத்தவரையில் பெரும்பாலான பாடசாலைகளில் சரஸ்வதியின் திருவுருவச்சிலைனை வைக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துவருகின்றோம்.
சரஸ்வதி என்பது பொதுவான ஒரு தெய்வம்.கல்விக்குரிய தெய்வம்.எந்த மதத்தினை சேர்ந்தாலும் கல்விக்குரிய அந்தஸ்தைபெற்றுள்ளது சரஸ்வதி மட்டுமேயாகும்.அதன் காரணமாக சரஸ்வதி சிலையை வைத்து வழிபடுவது மிகவும் முக்கியமாகும்.
பாடசாலையின் அதிபராக இருக்கும் போதகர் ஒருவர் கூட தனது பாடசாலையில் சரஸ்வதி சிலையொன்றை அமைத்து தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடசாலைகள் வெறுமனே மதத்திற்கான பாடசாலைகள் அல்ல.அது மாணவர்களுக்கான பாடசாலை.பாடசாலைகளில் உள்ள பெரும்பான்மை மாணவர்களின் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்படவேண்டும்.
ஏனைய மாணவர்களுக்கும் மத உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றார்.

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago