Suganthini Ratnam / 2016 நவம்பர் 14 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நாங்கள் வைத்துள்ள மதிப்பையும் நம்பிக்கையையும் இன்னமும் இழக்கவில்லை என்பதுடன், மிகவும் பொறுமையாகவும் உள்ளோம். ஆனால், பொறுமையாக இருப்பதால், கண்டும் காணாமல்; இருக்கும் நிலைமையை நல்லாட்சி ஏற்படுத்திவிடக்கூடாது' எனக் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி ஜீனியஸ் முன்பள்ளிப் பாடசாலையின் முதலாவது வருடக் கலை விழா ஞாயிற்றுக்கிழமை (13) மாலை நடைபெற்றது. இவ்விழாவில்; கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'ஆட்சி மாறினாலும், இனவாதம் இன்னும் ஒழியவில்லை என்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையைச் சேர்ந்த விகாராதிபதியின் செயற்பாடு சிறந்த உதாரணம் ஆகும்.
அண்மையில் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி நடந்துகொண்ட செயற்பாடு தமிழ் பேசும் மக்களைப் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. கிராம உத்தியோகஸ்தர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் தூஷிக்கும் வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இவரின் இந்தச் செயற்பாடு அநாகரிமானது என்பதுடன், கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
எனவே, இவர் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் புத்தசாசன அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
'மேலும், சிறுபான்மையினச் சமூகங்களினுடைய பிரச்சினைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக்காலத்தில் நீதி கேட்டும் நீதி கிடைக்காத காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சி பீடத்துக்கு கொண்டுவந்தோம்.
ஆனால், இப்பொழுதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விட்டுச்சென்ற எச்சங்கள் இனவாதத்துக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது என்றால், அவ்வாறான விடயங்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்தால் நிச்சயமாக மீண்டும் ஆட்சி மாற்றத்துக்கு சிறுபான்மையினச் சமூகங்கள் ஒன்றுபடும் என்பதற்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை' எனவும் அவர் கூறினார்.
27 minute ago
35 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
6 hours ago
21 Dec 2025