2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘டெங்கு ஒழிப்பைத் தீவிரப்படுத்தவும்’

Kogilavani   / 2017 மார்ச் 12 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு  மாகாணத்தில் டெங்கு  ஒழிப்பு நடவடிக்கைகளைத்  தீவிரப்படுத்துமாறு, முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய, தற்போது சகல உள்ளூராட்சி மன்றச் செயலாளர்களுக்கும் தமது பகுதிகளில் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முழுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அவர்  தெரிவித்தார். 

பொது சுகாதாரப் பரிசோதகர்களையும் இணைத்துக் கொண்டு, இந்நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பதுடன்,  ஆளணிப் பிரச்சினைகள் இருப்பின், அது குறித்து அதற்குரிய தீர்வுகளை வழங்குமாறும் கிழக்கு முதலமைச்சர் தமக்கு பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளுக்கு, மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க  வேண்டுமெனவும், கிழக்கிலிருந்து டெங்கு அபாயத்தை இல்லாமலாக்குவது மக்களின் ஒத்துழைப்பினால் மாத்திரமே சாத்தியப்படும் எனவும், அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .