Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மாணவர்கள் தாம் பெறும் கௌரவத்துடன் நின்றுவிடாது தொடர்ச்சியான சாதனைகளை நிகழ்த்தவேண்டும் என்று தெரிவித்த பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,சாதனைகளே ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையின் உயர்வு எனவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு தேற்றாத்தீவை சேர்ந்த அமரர் த. பாக்கியராசாவின் ஞாபகார்த்தமாக தேற்றாத்தீவு கிராம மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை தேற்றாத்தீவு மகா வித்தியால மண்டபத்தில் வெற்றி விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஆரம்பத்தில் சாதனைகளைப் படைக்கும் மாணவர்கள் சிலர் இறுதி நிலையில் தோல்வியை சந்திக்கின்றனர்.அதற்கு காரணம்,ஆரம்பத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியானது இறுதியான காலத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை என்றார்.
இதில், கிழக்கு பல்கலைக்கழக சிரஷ்ட விரிவுரையாளர் சோ.ஜெகநாதன் , தேற்றாத்தீவு மகாவித்தியாலய அதிபர் ஆ.உதயகுமார்,சிவகலை வித்தியாலய அதிபர் எஸ்.சிவசம்பு, களுதாவளை மகா வித்தியாலய அதிபர் எஸ்.அலோசியஸ்,அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலய அதிபர் க.தவராசா, மாவேற்குடா மகா வித்தியாலய அதிபர் மு.குணசேகரம் வர்த்தகர் த.மகேந்திராசா, முன்னாள் ஆசிரிய ஆலோசகர் எஸ்.சபாரெத்தினம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தேற்றாத்தீவை சேர்ந்த புலமைப்பரிசில பரீட்சை, க.பொத.(சஃத) மற்றும் க.பொத.(உஃத) சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago