2025 மே 08, வியாழக்கிழமை

'தேர்தலுக்கு முன்பாக பரிசோதனைகள் இடம்பெறும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளூராட்சி சபைகளிலும் பரிசோதனைகள் இடம்பெறும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி வாரத்தை யொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாநகர சபை, நகர சபை மற்றும் அனைத்து பிரதேச சபைகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் சகிதம் தாங்கள் நேரில் விஜயம் செய்து உள்ளூராட்சி நிர்வாகத்தின் வேலைத் திட்டங்கள், குறைபாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை நேரில் கண்டறிந்துள்ளோம்.

அடுத்து வருகின்ற மாதங்களில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களிலும் இவ்வாறான உள்ளகப் பரிசீலனைகள் இடம்பெறும்.

நிதிக் கையாளுகை, தாபனப் பிரிவுச் செயற்பாடுகள், அபிவிருத்திப் பிரிவுச் செயற்பாடுகள் பற்றி எமது குழுக்கள் பரிசோதனைகளில் ஈடுபடுவார்கள்.

எதிர்வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னராக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற 45 உள்ளூராட்சி சபைகளிலும் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X