Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 25 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களில் 41 பேர் தமிழ் ஊடகவியாளர்கள், 03 பேர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆயினும் 03 பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்பில் நீதி விசாரணை ஆரம்பித்துள்ளபோதும், 41 தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரணையும் இன்று வரை ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தயாபரன் தெரிவித்தார்.
திருகோணமலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, நேற்று (24) கல்முனை வை.எம்.சீ.மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தழிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் தாம் கோரிக்கையை முன் வைத்த போது தமிழ் ஊடகவியலாளரின் தலைவர் என்று கூரும் பொறுமைக்குறிய படுகொலை செய்யப்பட்ட சிவராம் அவர்களை யார் என்று பொலிஸ் மா ஆதிபர் வினவுகிறார்? அவருடைய வழக்கு இலக்கத்தை கூட அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் இன்று தமிழ் ஊடகவியலானர்களது படுகொலை தொடர்பான விசாரனை காணப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நஸ்ட ஈடு வழங்குவதாக தெரிவித்தள்ளார். ஆயினும் குறைந்தது 05 தமிழ் ஊடகவியலாளர்களின் நீதி விசாரணையையாவது நீதிமன்றத்துக்கு எடுத்து விசாரணையை ஆரம்பித்தாலேயே நாட்டில் ஊடகப்பணியில் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கை ஒன்று ஏற்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago