Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானது அல்லவென அப்பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராசா தெரிவித்தார்.
இதேவேளை, இப்பேரவையானது ஒரு அரசியல் கட்சி இல்லையென்பதுடன், இனியும் அரசியல் கட்சியாக மாறப்போவதில்லையெனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடங்களுக்கு தெரிவித்த அவர், 'தமிழ் மக்கள் பேரவையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், இப்பேரவை கூட்டமைப்புக்கு எதிராக ஆரம்பிக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக த.தே.கூ. பாடுபடுகின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்' என்றார்.
'இனப் பிரச்சினைக்கான தீர்;வு இழுபட்டுக் கொண்டுபோகும் நிலைமை காணப்படுவதினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள புத்திஜீவிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உந்துசக்தியாக இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ளார்கள். இப்பேரவையின் நோக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை இணைந்து தீர்க்க வேண்டும். அம்மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதேயாகும்.
இப்பேரவையானது வடக்குக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. வடக்குக்கும் கிழக்குக்கும் சொந்தமானது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்; இப்பேரவையை ஆரம்பித்ததாக சிலர் எண்ணுகின்றனர். ஆனால், அவர் இதை ஆரம்பிக்கவில்லை. சில தமிழ்ப் புத்திஜீவிகள் இணைந்து ஏற்பாட்டுக்குழுவாக இருந்து இதை ஆரம்பித்தனர். இதற்கு வடமாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள புத்திஜீவிகளையும் அழைத்திருந்தனர்.
இப்பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் இப்பேரவை மூன்று இணைத்தலைவர்களைக் கொண்டதாக அமையுமென கூறப்பட்டது. இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் மற்றும் நான் உட்பட மூவர் இணைத்தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டோம். இந்த பேரவையில் 30 அங்கத்தவர்கள் இருந்தாலும், எதிர்காலத்தில் ஆர்வமுடையவர்களையும் சேர்த்துக்கொண்டு இது செயற்படவுள்ளது' எனத் தெரிவித்தார்.
38 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago