2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'தமிழர்களுக்கு இன்று அரசியல் வெற்றிடம்'

Kogilavani   / 2017 மார்ச் 12 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, பழுலுல்லாஹ் பர்ஹான், பேரின்பராஜா சபேஷ்,  ரீ.எல்.ஜவ்பர்கான்

“தமிழர்களுக்கு இன்று அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதனை நிரப்பவேண்டிய கடமையில் நாங்கள் உள்ளோம்.

"கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டை மேற்கொள்ளும் வகையிலும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி செயற்படும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் எமது கட்சி அரசியல் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளது” என, அக்கட்சியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைச் செயலகம், இலக்கம் 127/55, புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு எனும் முகவரியில் கடந்த சனிக்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் உபதலைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில், இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அலுவலகம் வடக்கில், மாங்குளத்தில் திறக்கப்படவுள்ளதுடன் கொழும்பிலும் திறக்கப்படவுள்ளது” என்றார்.

அத்துடன், 'நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகித்தாலும் எதனையும் செய்யமுடியாத நிலையிலேயே உள்ளது. காணி உட்பட தமது உரிமைகளுக்காக மக்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .