Suganthini Ratnam / 2015 நவம்பர் 08 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
தமிழ் மக்களின் வாக்குகளினாலும் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவேண்டும்.
தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதற்கு முன்னராக புரிந்துணர்வு, நல்லிணக்க அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (07) நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது அவர்களுக்கு மட்டுப்படுத்தியதாக அமையவேண்டும். இந்தக் கைதிகளின் விடுதலையை காரணமாக வைத்துக்கொண்டு, ஏனைய குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளக்கூடாது' என்றார்.
'மேலும், கைதிகளின் விடுலையுடன் மாத்திரம் நின்றுவிடாது, இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் உரிய இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்' எனவும் அவர் தெரிவித்தார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025