Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அரசியல்வாதியொருவரின் முயற்சியில் கொண்டுவரப்பட்டு அடிக்கல் நடப்பட்ட திட்டத்தை மற்றுமொரு அரசியல்வாதி உரிமை கோரி திறந்துவைக்கும் நாகரிகமற்ற அரசியலிலிருந்து எமது பிரதேச அரசியல்வாதிகள் விடுபட வேண்டும் என கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மயிலம்பாவெளியில் இன்று வெள்ளிக்கிழமை செமட்டசெவன மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அரசியல் என்பது மக்கள் ஆணையுடன் தொடர்புடைய விடயம். மக்கள் உள்ளங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். எனக்கு மாவட்டத்திலே உள்ள மக்கள் பலம் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு. இந்த மாவட்டத்திலே நேர்மையாக தைரியமாக செயற்பட முடியும் என்கின்ற நம்பிக்கை என்னிடமுள்ளது.
இந்த மாவட்டத்தில் வீடமைப்பு மாத்திரமின்றி கிராமிய பொருளாராட, வாழ்வாதார விடயங்களை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் சிரேஷ்ட முகாமையாளர் ஜெகத் வன்னியாராட்சி, மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், ஏறாவூரப்பற்று பிரதேச செயலாளர் உ.உதஸ்ரீதர், காணி சீர்திருத்த ஆணைக்குழு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் நே.விமல்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மயிலம்பாவெளியின் தாழையடிக் கிராமத்தில் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இவ்வீடுகளை நிர்மாணிப்பதற்காக கடன் உதவி வழங்கப்படுகின்றது.தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான குடியிருப்பாளர்களுகள் ஒவ்வொருவருக்கும் அரச காணி 15 பேர்ச்சஸ் வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.


6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago