2025 மே 07, புதன்கிழமை

“நாங்கள் உணர்வு பூர்வமாக செயற்படவில்லை”

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

நாம் வெற்றி பெற்றிருந்தாலும் கூட எமது தேர்தல் முடிவுகள் அற்ப சொற்ப வாக்குகளால் வீணடிக்கப்பட்டதில் இருந்து இன்னும் நாங்கள் சரியாகப் பாடம் படிக்கவில்லை, நாங்கள் உணர்வு பூர்வமாகச் செயற்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் ஏன் இன்னும் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றார்கள் என்கின்ற விடயம் தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயங்கள் இடம்பெறுகின்றன. எமது தோளைக் கொடுத்து நாம் தூக்கி விடுகின்றோம். எம்மீது ஏறியிருந்து அவர்கள் தலையைக் காட்டுகின்றார்கள்.

இத்தனையும் செய்வது எமது உடன்பிறப்புகள் தான். யார் என்ன கூறினாலும் மூன்று பிரதேசங்களுக்கும் மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கும் கைங்கரியம் எம்மாலேயே மேற்கொள்ளப்பட்டது என்றார்.

மேலும்,வெற்றிலைக்கும் யானைக்கும் வாக்கிடுபவர்களை நாம் சிந்திக்க வைக்க வேண்டும். அவர்களது எண்ணங்களை மாற்ற வேண்டும். சொந்தம், சாகியம் என்பதையெல்லாம் விடுத்து நாங்கள் தமிழர் என்ற ஒரே சாகியத்துடன் கொள்கைக்கு வாக்களிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழும் அளவுக்கு எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X