Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 22 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகவும் இறுதித் தடவையாகவும் நாடாளுமன்றத்தில் மாவீர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றி வணக்கம் செய்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சி மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை கிளையின் கூட்டம் அதன் தலைவர் சி.புஷ்பலிங்கம் தலைமையில் அரசடித்தீவில் சனிக்கிழமை (21) இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தலைவர் சம்பந்தன் ஐயா 2013இல் யாழில் இடம்பெற்ற மே தினத்தில் சிங்க கொடியை தூக்கியது தொடர்பாக தமிழ் மக்களில் சிலர் அதிருப்தியை வெளியிட்டனர். ஆனால், சிங்க கொடி தூக்குவதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு சம்பந்தன் ஐயா திருமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயம் திறப்பு நிகழ்வில் புலிக்கொடியை ஏற்றினார் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.
அதுமட்டுமன்றி வரலாற்றில் முதல் தடவையும் இறுதித் தடவையுமாக கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சம்பந்தன் ஐயா தலைமையில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி மாவீரர்களை நினைவு கூர்ந்து சம்பந்தன் ஐயா உரையாற்றியதையும் மறக்க முடியாது என்றார்.
மேலும்,சிங்ககொடி தூக்கியதால் துரோகம் என்றோம். புலிக்கொடி ஏற்றினால் தியாகி என்று சொன்னோமா இல்லை. அந்தந்த காலமும் சூழ்நிலைகளும் அரசியல் தலைமைகளையும் மாற்றத்துக்குட்படுத்தும் என்பதற்கு இதை தவிர உதாரணங்கள் சொல்லத் தேவையில்லை.
ஆனால், இவ்வாறான சம்பவங்களால் எமது கொள்கையை மாற்றி சரணாகதி அரசியல் செய்வோமேயானால் அது தான் துரோகமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago