Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'இலங்கையில் நீதியான விசாரணை உள்ளக பொறிமுறையின் கீழ் நடக்குமென்று எமது மக்களோ, நாமோ நம்பவில்லை. நம்பத் தயாருமில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஐ..நா. மனித உரிமைப் பேரவை தனது அறிக்கை மூலம் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சம்பவங்களை போர்க்குற்றங்களாகவும் மனிதாபிமானத்திற்கும் சர்வதேச மனித உரிமைகளுக்கும் எதிரான குற்றங்களாக இனங்கண்டு இதனோடு தொடர்புடையவர்களை இச்செயல்களுக்காக பொறுப்புக்கூற வைப்பதுடன், உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற வகையில் இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை வைக்காது கலப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை சிபாரிசு செய்துள்ளது. ஆனால் இலங்கை அரசோ இது தொடர்பாக சர்வதேசத்திற்கு ஒரு கதையும் உள்நாட்டுக்கு ஒரு கதையும் கூறுகின்றது.
அரசு உண்மையில் தான் கூறுவதுபோல பூச்சிய இழப்புக்களுடன் மனிதாபிமான யுத்தத்தை நடத்தி இருந்தால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையோ கலப்பு விசாரணை பொறிமுறையோ தேவையில்லை துணிந்து சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுத்து தன்மீது சர்வதேசம் வீண்பழி சுமத்துவதென நிருபிக்க முடியுமாயின் இலங்கை அரசு கூறுவதை நம்பலாம்.
ஆனால் ஸ்ரீலங்கா அரசு இறுதிக்கட்ட யுத்தத்தில் குற்றம் இழைத்ததற்கு ஆதாரபூர்வமான சாட்சிகள் உண்டு. இது தொடர்பாக சர்வதேச விசாரணையோ அல்லது கலப்பு விசாரணையோ நடைபெறுமாக இருந்தால் இறுதிக்கட்ட யுத்தத்தில் கட்டளையிட்டவர்கள் தொடக்கம் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கூட குற்றவாளிகள் என நிருபிக்கக்கூடிய நிலையே இன்றுள்ளது.
இதனால்தான் சர்வதேச விசாரணையோ, கலப்பு விசாரணையோ இடம்பெற இடமளிக்க முடியாது எனவும் எமது நாட்டின் நீதிப்பொறிமுறை தற்போது சுயாதீனத்துவம் பெற்றுள்ளது. எனவே நாமே உள்ளக விசாரணை மூலம் விசாரணை செய்கிறோமென புலம்புகிறது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago