Thipaan / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்
பிணக்காளர்களின் மனப்பாங்கு மற்றும் இரு தரப்பினரின் நடுநிலைத் தன்மையைக் கொண்டு கொண்டு நியாதிக்க அடிப்படையில் புதிய பிணக்கு உருவாகாமல் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்து வெற்றி கண்டுள்ளோம் என மண்முனை வடக்கு மத்தியஸ்த சபையின் தலைவர் எஸ். விஸ்ணுமூர்த்தி தெரிவித்தார்.
நீதி அமைச்சின் கீழ் இயங்கும் மண்முனை வடக்கு மத்தியஸ்தர் குழாத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதி மன்றம், பொலிஸ் நிலையங்கள் என்பவற்றிலிருந்து ஆற்றப்படும் பிணக்குகள், நிதி நிறுவனங்கள், பொது மக்கள்;, ஆலய, கிராம அபிவிருத்தி சங்கங்கள் பிணக்குகளை முன்வைக்கின்றனர்.
எமது சபை 2013 இல் 478 பிணக்குகளோடு பாரமெடுத்த நிலையில் இற்றைவரையில் கிடைக்கப்பெற்ற 2774 பிணக்குகளில் 80 சதவீதமான பிணக்குகளுக்கு இணக்கப்பாட்டுடனான தீர்வு பெறப்பட்டுள்ளன.
1988 ஆம் ஆண்டு இலங்கையில் மொத்தம் 329 மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்ட நிலையில் 328 மாத்திரமே இயங்குகின்றன. எமது சபையில் தற்போது 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 31 பேர் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளார்கள் என்றார்.
இதன்போது மத்தியஸ்தர் சபையின் சிறப்பு மலர்-2015 வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா, மத்தியஸ்த சபையின் உறுப்பினர்கள் மற்றும் கிராம சேவகர்கள் கலந்து கொண்டனர்.


2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago