Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,பைஷல் இஸ்மயில்
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச சபை பகுதிகளிலும் எங்கெல்லாம் வெள்ளம் வரும் அபாயம் இருக்கிறதோ, எங்கெல்லாம் வடிகான்கள் துப்பரவின்றிக் காணப்படுகிறதோ, அப்பகுதிகளில் மழை நீர் வடிந்தோடக் கூடிய வழிவகைகளை உடனடியாக மழைக்கு முன்னர் ஏற்பாடு செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளூராட்சி மன்றச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மிகவிரைவில் கிழக்கின் பல பாகங்களிலும் வடிகான்கள் அமைக்கும் பணிகள் இடம்பெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.
இந்நிலையில்,மாரி மழைக்காலம் ஆரம்பமாகவுள்ளதால்,பொதுமக்களின் இருப்பிடம், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்காமல் உடனடியாக மழை நீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எனவே,ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றச் செயலாளர்களும் தங்களது கடமைகளாக இதனை ஏற்று உடனடியாக வடிகான்களைத் துப்பரவு செய்யவும் பாதைகளைச் சீர் செய்யவும் நீர் வடிந்தோடும் இடங்களைச் சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பணித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago