2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'நெல்லி சிறுவர் பூங்கா' பாவனைக்காக கையளிப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

ஹொலன்ட் (நெதர்லாந்து) நாட்டு சீமாட்டியான நெல்லி நீரோப் என்பவரின் 01 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில்லுள்ள ஏறாவூர் விசேட பாடசாலைகென அமைக்கப்பட்ட 'நெல்லி சிறுவர் பூங்கா' மாணவர்களின் பாவனைக்காக நேற்று சனிக்கிழமை (20) மாலை கையளிக்கப்பட்டது. 

ஐயங்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் வலயக் கல்வியலுவலகத்தின் சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நாஸர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக சீமாட்டி நெல்லி நீரோப் கலந்து கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வில், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் விசேட பாடசாலையின் ஸ்தாபகருமான திருமதி எஸ்.ஏ. நஸீரா, கோட்டக்;வியதிகாரி ஐ.எல் மஹறூப் மற்றும் வர்த்தகப் பிரமுகர் எம்.ஜி அத்தாஸ் அதிபர் திருமதி எம்.மரியம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கடந்த சுமார் ஐந்து வருடகாலமாக அடிப்படை வசதிகளின்றி 22 மணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியைகளுடன் ஐயங்கேணி-ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தின் சமையலறைக் கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் ஏறாவூர் விசேட பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X