Suganthini Ratnam / 2015 நவம்பர் 04 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்தம் முடிந்தாலும், நசுக்கப்பட்ட சமூகத்துக்குரிய தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லையென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சுமார் 23 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யுத்தம் இடம்பெற்று அழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சமூகங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இதற்காக இந்த மாகாணத்திலுள்ள பொதுமக்கள் முதல் அதிகாரிகள், அரசியல்வாதிகளென அனைவரினதும் ஒத்துழைப்பு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து தேவையாக உள்ளது' என்றார்.
'மேலும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின இனவாதம் இல்லாத ஒருவர். அவர் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்றும் இன ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் குரல் கொடுக்கின்ற ஒரு சிறந்த அமைச்சர். அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அனைத்து வசதிகளும் தேவையென்பதை உணர்ந்து அதற்கு உதவுபவராக சுகாதார அமைச்சர் உள்ளார்.
இந்த மாகாணத்துக்கு அத்தனை வளங்களையும் முதலீடுகளையும் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை எனது தலைமையிலான கிழக்கு மாகாணசபை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது.' எனவும் அவர் தெரிவித்தார்.
'தற்போதைய மாகாணசபையில் சகல இனத்தவர்களும் அங்கம் வகித்து அமைச்சுப் பொறுப்புகளை பெற்றுள்ளார்கள். ஊழல் இல்லாத நிர்வாகமாக தற்போதைய மாகாணசபை திகழ்கின்றது.
இந்த மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை விட்டுக்கொடுக்கின்ற முதலமைச்சராக நான் இருக்கப் போவதில்லை. இன்னமும் மத்திய அரசிடமிருந்து நாம் பல அதிகாரங்களைப் பறித்தெடுக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளைப் பலப்படுத்துகின்ற வேலையை இந்த மாகாணசபை மேற்கொண்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்நஸீர், அந்த அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் உள்ளிட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago