2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'நல்லாட்சி பொய்யாட்சியா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 22 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பகிரங்கமாகவே நீதிமன்ற உத்தரவை மீறி பகிரங்கமாகவே செயற்பட்டு நல்லாட்சிக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் பிக்கு மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாதிருப்பது நல்லாட்சி பொய்யாட்சியா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் செயற்பாடுகளைக் கண்டித்து மட்டக்களப்பு செங்கலடியில் ஆலயகுருக்கள், பூசகர்கள், தர்ம கர்த்தாக்கள் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை (22.11.2016) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர் 'தமிழ் சமூகம் விழுந்து விட்டது. இனி எழும்பாது என்று எவரும் குறை மதிப்பீடு செய்து விடக் கூடாது. தற்போது கால நிர்ப்பந்தத்தின் காரணமாக வீழ்ந்து கிடக்கின்ற இந்த சமூகம் குதிரை மாதிரி மீண்டெழுந்து ஓடும் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி செயற்படும் பிக்குவின் நடவடிக்கைகளை சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரும் அதிகாரிகளும் கை கட்டி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது நாட்டின் நீதித் துறை கேவலத்துக்குள்ளாக்கப்படுகின்றது என்பதற்கு முன்னுதாரணமாகும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X