Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
சிறைகளில் தமிழ் இளைஞர்களை அரசியல் கைதிகளாக அடைத்து வைத்துக் கொண்டிருக்கும் போது நல்லாட்சி என்று கதைப்பது வெட்ககேடாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை பூர்திசெய்து நடத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி விழா அதன் தலைவர் வீ.ஜெகநாதன் தலைமையில் நேற்று புதன்கிழமை(23) மாலை இடம்பெற்றது.இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இளைஞர்களின் கரங்களிலேயே ஒருநாட்டின் தலைவிதி தங்கியுள்ளது. இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை என்பவற்றை வளர்க்கவும் விளையாட்டுக்கள் உந்து சக்தியாக அமைகின்றது.
கடந்த காலத்தில் விடுதலைப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் எமக்காக மிகப்பெரிய தியாகங்களை புரிந்து மாண்டுள்ளனர். அவர்கள் இன்று அவ்வாறான தியாகங்களை செய்யாமல் இருந்திருப்பார்களானால் எமது அரசியல் பலம் இன்று சர்வதேசம் வரை சென்றிருக்காது.
ஒருநாள் அவர்களின் தியாகத்திற்கான தீர்வு கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிட முடியாது என்றார்.
மேலும்,தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளதாக பலர் கூறுகின்றனர்.ஆனால் இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகளில் எமது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விடுதலைசெய்யப்படாமல் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என புதிய ஐனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றபின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது. ஆனால்,அது நடைபெறவில்லை.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியபோதும் எவருமே விடுதலை செய்யப்படவில்லை எமது இளைஞர்கள் தொடர்ந்தும் சிறைகளில் வதைபடும்போது அவர்களை விடுதலைசெய்யமுடியாத வக்கற்வர்களாத்தான் நாமும் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியையும் எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை அலங்கரிக்கின்றோம்.
போதாக்குறைக்கு மாவட்ட அபிவிருத்தி அமைச்சு பதவியும் எமக்கு கிடைக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.எந்தப் பதவிகளை நாம் பெற்றாலும் சிறைகளில் உள்ள எமது இளைஞர்களை விடுதலைசெய்ய முடியாமல் இருக்குமானால் இவ்வாறான பதவிகள் எமக்கு ஏன்?எனபாதிக்கப்பட்ட உறவுகள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.
உரிமைக்கான போராட்டம் அபிவிருத்தியில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் தந்தைசெல்வா காலத்தில் எமது தலைவர்கள் பல அமைச்சர் பதவிகளையும் சலுகைகளையும் பெற்று வடக்கு, கிழக்கு தாயகத்தை சிங்கப்பூராக மாற்றியிருக்கமுடியும்.
அதனை தந்தை செல்வா செய்ய வில்லை எமக்கான சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டும் அதனூடானஅபிவிருத்தியே எமக்கு தேவை என்பதில் இலட்சியப்பற்றுடன் செயலாற்றினார் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago