Princiya Dixci / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்திரத் தன்மை இல்லை என்பதை நடப்பு நிகழ்வுகள் சாட்சி பகர்கின்றன. அதனாலேயே மக்கள் மீண்டும் அமைதியற்ற அச்சம் நிறைந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்களென, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், இன்று (26) தெரிவித்தார்.
சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாகக் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'எங்களுடைய நாட்டிலே ஒரு நிலையான ஆட்சியும் சுமுகமான நீதியும் யதார்த்த பூர்வமாக மக்கள் வாழக் கூடிய நிலையும் உருவாகும் என்ற எதிர்பார்ப்புடன்தான் நாம் காத்திருந்தோம்.
ஆனால், நாட்டிலே அரசியல் ஸ்திரத் தன்மை இல்லை. மீண்டும் நாடு குழப்ப நிலைகளுக்குச் செல்லக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.
சமீபமாக மட்டக்களப்பில் அரச அதிகாரிகள் நால்வர் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் மூவர் மரணித்திருக்கின்றார்கள்.
காணிப் பிரச்சினை உக்கிரமடைந்து கொண்டு வருவதனால் இந் நிலைமை ஏற்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் காணி அபகரிப்பும் காணிகளுக்கு அடாத்தாக உரிமை கோருவதும் அதிகாரிகள் தலையிட முடியாத நிலையும் இருந்து வருகின்றது.
நாங்கள் சிவில் சமூகமாக, அரச சார்பற்ற நிறுவனங்களாக. மக்கள் குழுக்களாக அவரவருடைய காணி உரித்தைக் கோரி நிற்கின்ற வேளையிலே, அவை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பும் ஏமாற்று வேலைகளுமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நாட்டில் வாழும் அனைவரும் நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையில் இருந்து, அரசாங்கம் இந்தக் காணிப் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்து வைக்காமல் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றது' என்றார்.
வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கருணா அம்மான் தலைமையில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதே, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியாகும்.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago