2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

போட்டிபரீட்சை இரத்து

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 11 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபையினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை இரத்துச் செய்யப்படுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக பட்டதாரிகள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரிடத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து மாகாண சபையின் கடந்த அமர்வின்போது மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் சுட்டிக்காட்டி நடாத்தப்பட்ட  போட்டிப்பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டுமென தெரிவித்து பிரேரணையொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

இது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் கிழக்கு மாகாண முதலமைச்சர்; மற்றும் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
 
இந்தக் குழு இது தொடர்பாக ஆராய்ந்து தமது முடிவை இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபைக்கு அறிவித்துள்ளது.
 
அதில் கிழக்கு மாகாண சபையினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை இரத்துச் செய்யப்பட வேண்டுமென அறிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவையடுத்து நடாத்தப்பட்ட இப் போட்டிப்பரீட்சை இரத்துச் செய்யப்படுவதாக அவிறிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X