Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவுகளில் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும்போது, ஆயுத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவியாளர் மனோன்மணி தட்சணாமூர்த்தி, இன்று திங்கட்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சமூக ஆளுகை அடைவதை இலக்காகக் கொண்டு கொள்கை வலுப்பெறச் செய்தல் மற்றும் பிரஜைகளின் ஈடுபாட்டுடன் திட்டங்களை செயற்படுத்துதல் எனும் விடயத்துக்காக வெல்லாவெளி மற்றும் கொக்கட்டிச்சோலை பிரதேச சபைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக அவர்; தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆயுத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சுமார் 3,500 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 2,733 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 1,450 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளதாக அவ்வப் பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும்; கணவன்மார்களை இழந்த குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்காகவும்; பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.
அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும்போது வீதிகள், நீர் விநியோகம், வீட்டுத்திட்டம் போன்றவையே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த அடிப்படை வசதிகள் தேவையாக உள்ளபோதிலும், வாழ்வாதாரத் தொழிலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எனவே விவசாயம், தென்னை தும்புக் கைத்தொழில், விவசாயப் பண்ணை, ஆடை உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பான தொழிற்சாலைகளை அமைத்து மனித வளத்தைப் பயன்படுத்த முயற்சித்தால், அது பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் தொழிலாக அமையுமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago