2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புத்தகக் கண்காட்சி

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், ஆளுமை விருத்தி மற்றும் கல்வியறிவை விருத்தி செய்யும் நோக்கோடு அவர்களின் பாடத்திட்டத்துக்கு பயன் தரும் புத்தகங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக நலன்புரி சங்கம் மற்றும் ஜெயா புத்தக நிலையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்ந இந்நிகழ்வை உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ். சித்திரவேல் கண்காட்சியை திறந்து வைத்தார்.

ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், வணிகம், விஞ்ஞானம், கலை பாடங்களுக்கான புத்தகங்கள், சிறுவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி சார் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இக்கண்காட்சி நவம்பர் 8ஆம் திகதி வரை காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை நடைபெறும்.

இதில்,வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சசீந்திரசிவகுமார், நலன்புரி அமைப்பின் செயலாளர் வி. மணிராஜ், மகாஜனக் கல்லூரியின் அதிபர் என். துரைராசசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X