Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 08 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
புத்தகக் கல்வி ஊடாக மாத்திரம் சமூகம் அபிவிருத்தி கண்டு விட முடியாது, மாணவர்களின் சகல புறக்கிருத்திய செயற்பாடுகளையும் ஒருங்கிணைப்பதன் மூலமாகவே சமூக அபிவிருத்தியை எட்ட முடியும் என வெருகல் பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.
பாடசாலைக் கல்வியோடிணைந்த உற்பத்தித் திறனை அதிகரித்தல் சம்பந்தமான கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அனைத்து மாணவர்களும் தமது உயர் கல்வியைப் பூர்த்தி செய்வதில்லை. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் தமது யுக்தித் திட்டமிடலை வகுக்க வேண்டும்.
ஈச்சிலம்பற்று வெருகல் கல்விப் பிரிவில் மாணவர்கள் மிகக் குறைந்த மட்டத்திலேயே தமது உயர் கல்வித் தகுதியை அடைந்து கொள்கின்றார்கள்.
ஆகையினால், இந்த புள்ளி விவரத்தை அடிப்படையாகக் கொண்டு ஏனைய மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி இப்பொழுதிருந்தே சிந்தித்தாக வேண்டும்.
குறைந்த பட்சம் பாடசாலைக் கல்வியை முடிப்பவர்கள் கிராமத்துக்குள் மீண்டும் செல்கின்ற போது சிறந்த பிரஜைகளாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது கல்வியலாளர்களது கடமையாகும்.
சமூக விழுமியங்களையும் இயற்கை வளங்களையும் பேணிப் பாதுகாத்து நாட்டை வளப்படுத்தக் கூடியவர்களாக மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும்.
போதைப் பொருளிலிருந்தும் சமூக விரோதச் செயற்பாடுகளிலிருந்தும் மாணவர்களை ஒதுக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்களும் அதிபர்களும் மாணவர்கள் முன்னிலையில் முன் மாதிரியான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டினால் பாடசாலைக் கல்வியோடிணைந்த உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளலாம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago