2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'பாதிப்பின்றி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அனர்த்தங்கள் ஏற்படும்போது பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை, துறுனு சிரம சக்தி எனும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி 167ஏ கிராமத்திலுள்ள சுனாமி ஓடை எனப்படும், கால்வாய் ஓடைக்கு மதகு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய காத்தான்குடி பிரதேச செயலாளர்,

வெள்ள நீர் வடிந்தோடமுடியாமல் வீட்டு மதில் சுவரைக் கட்டுகின்றார்கள். இது திட்டமிட்டப்படாத நடவடிக்கையாகும்.

கோடை காலத்தில் இவ்வாறு செய்து விட்டு மாரி காலத்தில் வெள்ள அனர்த்தத்துக்கு முகம் கொடுக்கின்றார்கள். அவ்வாறு செய்யாமல் மாரி காலத்தில் வெள்ள நீர் தேங்கி நின்று வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் வெள்ள நீர் வடிந்தோடக் கூடிய வகையில் மதில் சுவர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் புதிய காத்தான்குடி தோணாக் காழ்வாயின் அணைக்கட்டு 12 மில்லியன் ரூபாய் நிதியில்  நிர்மாணிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

மேலும், இந்த துறுனு சிரம சக்தி எனும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சுனாமி ஓடை எனப்படும் கால்வாய், ஓடைக்கு மதகு நிர்மாணிப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 7,5000 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞர்களின் மனித வள சக்தியைக் கொண்டு 22,5000 ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டுமென காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி சட்.எம்.நஸ்மல் இலாஹி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X