2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புதிய காத்தான்குடியில் கைகலப்பு; நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 14 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிய காத்தான்குடிப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (13)  இரவு இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்திலுள்ள பலசரக்குக் கடை ஒன்றில்  அப்பிரசேத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இனிப்புப் பண்டம் வாங்கிச் சென்றுள்ளார்.

இந்நிலையில்,  தனது கடையிலிருந்து குறித்த சிறுமி  இனிப்புப் பண்டத்தை திருடிச் சென்றுள்ளதாகக் கூறி குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற கடை உரிமையாளர், சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிறுமியின் தந்தைக்குத் தெரியவரவே, மேற்படி கடைக்குச்  சென்ற சிறுமியின் தந்தையும் அவரது நண்பரும் கடை உரிமையாளருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.  

இந்தச் சம்பவத்தில் சிறுமியின் தந்தை,  கடை உரிமையாளர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்;.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .