2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'பாம்பாட்டியவர்கள் இன்று தலையாட்டுகின்றனர்'

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இனவாதத்தினால் இளைஞர்களை பிரித்து வைத்து மகுடி ஊதி பாம்பாட்டியவர்கள் இன்று பொம்மைப்போல் தலையாட்டுகின்றனர் என கல்குடாத் தொகுதி இளைஞர்; பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் எம்.ரி.எம்.பாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

யாரும் சத்தம் போட்டு பேச முடியாது, எமது உரிமையை கேட்டுப்பெறமுடியாது என்ற காலம் நல்லாட்சியுடன் மலையேறி போய் விட்டது.

கடந்த அரசாங்கத்தின் அனைத்து துறைகளையும் தமக்குள் வைத்துக்கொண்டு ஏழை இளைஞர்களாகிய நாம் வாழ் நாளில்  கண்டிராத 'சைபரை'  ஒன்றுக்கு முன் போட்டு கொண்டு அனைத்து அரச அரசசார்பற்ற  நிறுவனங்களிடமிருத்து பெரும் தொகையான பணத்தினை கொள்ளையிட்டு கொண்டனர்.

யுத்தம் முடித்துவிட்டது தை பிறந்து விட்டது எமக்கு வழிபிறக்கும் என்று இளைஞர்களாகிய நாங்கள் கனவு கண்டு கொண்டு தான் இருந்தோம். ஆனால் அன்று எமக்கு தெரியவில்லை நாம் பார்த்தது வெறும் காணல் நீர் என்று என தெரிவிக்கப்பட்டடுள்ளது.

மேலும்,இன்று அரசு எமக்கு 'கொப்' நம்பிக்கை என்ற நல்ல திட்டத்தின்னூடாக இளைஞர்களாகிய எம்மை ஒன்றிணைக்கவுள்ளது.

அரசாங்கத்தினால் இளைஞர்களுக்காக நடைமுறைப்படுத்தவுள்ள நல்ல திட்டங்களை படித்து தெரிந்து கொண்டதன் விளைவாகவே நான் இன்று இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ளேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X