2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

10 பேருக்கு வாழ்வாதார உதவிகள்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த பத்து பேருக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று புதன்கிழமை மாலை  வழங்கப்பட்டன.

சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் நிதி அனுசரணையில் தமிழறிவியல் மன்றத்தின் நெறிப்படுத்தலுடன் இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கும் நடவடிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், 'யுத்தத்தினால் தமது அங்கங்களை இழந்து வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பத்து பயனாளிகளுக்கு அவர்களின் தொழிலுக்கு ஏற்ற வகையில் 25 ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஒரு இலட்சம் வரையான பணம் வழங்கப்படுகின்றது. யுத்தத்தினால் தமது அங்கங்களை இழந்த முன்னாள் போராளிகளும் இதில் அடங்குகின்றனர்.

யுத்தத்தினால் தமது அங்கங்களை இழந்து இன்று வலது குறைந்தோராக நமது மட்டக்களப்பு மாவட்டத்தில் பலரும் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். யுத்தத்தினால் தமது அங்கங்களை இழந்துள்ள இவர்கள் இந்த உதவியினைக் கொண்டு தமது வாழ்வதாரத்தினை மேம்படுத்தி குடும் வருமானத்தை அதிகரிப்பதுடன் தமது பிள்ளைகளின் கல்வியையும் முன்னேற்ற வேண்டும்.

தங்கி வாழ்பவர்களாக இருக்க கூடாது. இவர்களின் உடலில் பாதிப்பு இருந்தாலும் உள்ளம் பலமாக இருக்கின்றது.
எனவே இந்த வாழ்வாதார உதவியைக் கொண்டு முன்னேற்றமடைய வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X