Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு விடயத்தில் சமஷ்டியாகவோ, ஒற்றையாட்சியாகவோ இருக்க வேண்டிய தேவையில்லை. பிரிக்கப்படாத ஒரே நாட்டுக்குள் ஒரு தீர்வு என்ற சொல் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, கல்லடி துளசி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'சமஷ்டியைக் கைவிட்டு விட்டோம் என்று சிலர் கூறுகின்றார்கள். ஒற்றையாட்சிக்குள் கூடுதலான அதிகாரம் பெறப்போகின்றோம் என்று மேலும் சிலர் கூறுகின்றார்கள். அவ்வாறு அல்ல நாங்கள் என்பதுடன், நிதானமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதை எமது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்துவோம்' என்றார்.
'எமது நாட்டில் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், மிகமிக உளப்பூர்வமாக எவ்வாறு விடுதலையைப் பெற முடியும் என்பது தொடர்பிலும்; எங்களுடைய விடயங்கள் தொடர்பில் எதிரிகளை எவ்வாறு இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவருதல், நீடித்து நிலைக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்காக முழுமையான அரசியல் தந்திரம் மற்றும்; அரசியல் உளவியல் என்கின்ற விடயங்களை வைத்துக்கொண்டு நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்' என்றார்
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago