Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
'தமிழர்களை தொடர்ந்தும் போராடும் இனமாக வைத்துக்கொள்வதற்கே பெரும்பான்மையினர் முயற்சி செய்து வருகின்றனர். நாங்கள் இந்த நாட்டின் மக்கள் என்பதை எந்த அரசாங்கமும் ஏற்பதற்குத் தாயாராக இல்லாத நிலைமையே இருந்து வருகின்றது' என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்;.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும்; சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் பாரிய அழிவை எதிர்கொண்ட சமூகமான தமிழ்ச் சமூகம், தற்போது எதையும்; பெறமுடியாத நிலையிலுள்ளது.
எமது உரிமையை இன்றும் போராடிப் பெறவேண்டிய நிலையிலேயே நாம் இருந்து வருகிறோம். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், அனைத்தையும் பெற்றுக்கொள்வோம் என்ற மாயை மட்டுமே எமக்கு இருந்து வந்தது. ஆனால் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை' என்றார்.
'மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்படவில்லையென்பதுடன், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தன்னை மீறி நடந்ததெனக் கூறியுள்ளமை அவருக்கு எந்தத் திக்கும் செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. இந்நிலையிலேயே சிறுபான்மைச் சமூகத்தின் காலை பிடிக்கும் முயற்சியை மஹிந்த மேற்கொண்டு வருகின்றார்.
எமது அரசியல் பலத்தை நாங்கள் அதிகரிக்க வேண்டும். இதனால், நாங்கள் பிரிந்து நின்று எமது சமூகத்தை மீண்டும் பாதாளத்துக்குள் கொண்டுசெல்லும் நிலைக்கு செல்லக்கூடாது' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025