2025 மே 14, புதன்கிழமை

பெரும்போகச் செய்கைக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை எதிர்வரும் செப்டெம்பர்; மாதம் 07ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிக்குள் நடத்திமுடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சீ.கிரிதரன் தலைமையில், மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை நடத்துதல் மற்றும் விதைநெல் விநியோகம், மானிய உர விநியோகம், நீர்ப்பாசனம், வங்கிக்கடன் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அந்த வகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் எதிர்வரும் 07ஆம் திகதி காலை 9.30 மணிக்கு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திலும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும் நடைபெறவுள்ளன.

மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் எதிர்வரும் 08ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்திலும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமம், கித்துள்வௌ, வெலிக்காகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டத்துக்கான கூட்டம் அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு செங்கலடியிலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக மண்டபத்திலும் நடைபெறவுள்ளன.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள் மற்றும் மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் 10ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வாகரை பிரதேச செயலக மண்டபத்திலும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக ஆரம்பக் கூட்டம் 10ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கிரானிலுள்ள றெஜி கலாசார மண்டபத்திலும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X