Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெரும்பான்மையின மக்களுக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என கொழும்பு ஸ்ரீPஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பின்னவல சங்க சுமண தேரர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு மற்றும் அரசியல் நடவடிக்கை தொடர்பாக அறிந்துகொள்ளும் பொருட்டு கொழும்பு ஸ்ரீஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பின்னவல சங்க சுமண தேரர் தலைமையிலான மாணவர்கள் குழு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தது.
கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின்; ஏற்பாட்டில் விஜயம் செய்த இக்குழுவினர்; மண்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமை மற்றும் அரசியல் நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்துகொண்டனர்.
இந்நிலையில், காத்தான்குடிப் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒன்றுகூடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், 'சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வும் நல்லுறவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதனைப் பல்கலைக்கழக மாணவர்களும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்' என்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago