2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'பெரும்பான்மையினத்தவருக்கு கிடைக்கும் உரிமை தமிழருக்கும் வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

இந்த நாட்டில் பெரும்பான்மையின மக்களுக்கு கிடைக்கும் அதே உரிமையும் அபிவிருத்திகளும் தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா, திங்கட்கிழமை  (02) நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த காலத்தில் தமிழர்களே  மிகவும் பாதிக்கப்பட்டனர். பல வருடங்களாக சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். இராணுவ முகாம்களாக இயங்கும் தமிழர்களின் வீடுகளும் தமிழ்ப் பாடசாலைகளும்  இயங்கும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.  யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். இவற்றையும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

இங்கு உரையாற்றிய த.தே.கூ. வின் மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், 'கிழக்கு மாகாணத்தில் கல்குடா கல்வி வலயமே அதிக பாடசாலைகளைக் கொண்ட கல்வி வலயமாகும். இங்கு அதிக தேவைகளையுடைய பாடசாலைகள் அதிகம் காணப்படுகின்றன. இது தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி இங்கு அவரை அழைத்து வந்து காண்பிக்க இருக்கிறோம்.

ஆசிரியர் இடமாற்றங்கள் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளிடம் இருந்தது. ஆனால், அதை இல்லாதொழித்து அனைவருக்கும் நியாயமான முறையில் இடமாற்றங்களை வழங்குவதற்கு அரசாங்க அதிகாரிகளுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம்' என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X