Kogilavani / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
“கதிரையில் இருந்துகொண்டு, வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற பெருமையைச் சம்பாதித்துக்கொள்ளக் கூடியவர்கள், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குத் தேவையில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மேலும், “அரசியல்வாதிகளைப் பிடித்து, குறுக்குவழிகளில் வலயக் கல்விப் பணிப்பாளர்களாக வருவார்களானால், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கல்வி சீர்குலைந்துவிடும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு உன்னிச்சை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு, சனிக்கிழமை (18) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை இயக்குவதற்கு, அர்ப்பணிப்புக் கொண்ட அதிபர்கள், அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். அந்தவகையில், இந்தக் கல்வி வலயத்துக்கு, போலித்தனமில்லாத அர்பணிப்புடன் செயற்படும் வலயக் கல்விப் பணிப்பாளரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றார்.
மேலும், “கரடியனாறு அல்லது ஆயித்தியமலைப் பகுதியில் நீர்தாங்கி அமைத்து, உன்னிச்சை நீரை படுவான்கரைப் பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன” எனவும் குறிப்பிட்டார்.
34 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
6 hours ago