Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Yuganthini / 2017 மே 10 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வ.துசாந்தன்
போர் என்பது வேண்டாம் போருக்கான காரணத்தினை அறிந்து, அதைச் சீர்செய்து, சமாதானம் என்ற போர்வைக்கு செல்வோம் என, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தேவிலாமுனையில், நடைபெற்ற கூத்தரங்கேற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போர் என்பது மனிதனுக்கு தேவையற்றது. ஆனால் நிர்ப்பந்தத்ததுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற விடயமாகும்.
மகாபாரதத்தில் நடைபெற்ற போரின் விளைவுகள் பற்றிக் கூறப்படுவதற்கு காரணம், போர் என்பது வேண்டாம். போர் இடம்பெறுவதற்கான காரணத்தினை அறிந்து, அதனை சீர்செய்து. சமாதானம் என்ற போர்வைக்குள் செல்ல வேண்டும் என்பதனையே விளக்குகின்றது.
இந்தவகையில் கூத்துக்கள் மூலமாக தமிழின் சிறப்பினை வலியுறுத்துகின்றோம்.
அதிலும்இ மட்டக்களப்பு தமிழ் மொழித்தான் சிறந்த தமிழ் மொழியாகும். தமிழின் பழமை சொற்களை எல்லாம் நாங்கள் தான் வைத்திருக்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
25 May 2025