Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற மனநிலையை குடும்பங்கள் பிள்ளைகளுக்கு உருவாக்கவில்லை. இதனால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துச்செல்கின்ற சூழல் உருவாகின்றது என உளவியலாளரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பிர்தௌஸ் நளீமி தெரிpவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு செயல்வாதம் 16நாள் வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையமும் இணைந்து பெடம் இன்டர்சனல் பிரான்ஸ் அமைப்பின் அனுசரணையுடன் இது தொடர்பான நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரையில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சமய தலங்களில் இவ்வாறான தலைப்புகளை பேசுவது வன்முறைகளை ஒழிப்பதற்கு முக்கிய இடமாக மாறும். இரண்டாவதாக இலங்கையினுடைய கல்வி எவ்வாறான மனிதர்களை உருவாக்குகின்றது எவ்வாறான சூழலை உருவாக்குகின்றது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இந்த கல்வி முறை நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது? நமது பெற்றோர் கல்விக்கூடாக எதனை எதிர்பார்க்கின்றார்கள்? என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டியவராக இருக்கின்றோம். வன்முறைகளை ஊக்குவிப்பதில், மாணவர்களை வித்தியாசமான சமூக சூழலுக்குள் உள்வாங்குவதில் காரணம் செலுத்துகின்றது.
மூன்றாவதாக ஊடகம் குறிப்பாக இந்திய சினிமாவும் நாடகங்களும் சீரியல்களும் நமது வீட்டிற்குள்ளேயே முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற மனிதர்களை உருவாக்குகின்றது. வியாபார நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட பல்வேறு சீரியல்களும் நாடகங்களும் குடும்பங்கள் மத்தியில் பிழையான விம்பங்களையே உருவாக்குகின்றது. வீட்டினுள்ளே தற்கொலைகள் அதிகரித்துச் செல்வதற்கு இவையே காரணமாகின்றது.
வீட்டினுள்ளே ஒரு பிரச்சனை வந்துவிட்டால் தாய் தந்தைக்கிடையே அல்லது பிள்ளைகளிடையே ஒரு முரண்பாடு வந்துவிட்டால் நாம் தூக்கில் தொங்கிவிடுவதே பிரச்சனைக்குத் தீர்வு என்று அவர்கள் மிக இலகுவாகவே நம்பிவிடுகின்றார்கள். பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற மனநிலையை குடும்பங்கள் பிள்ளைகளுக்கு உருவாக்கவில்லை. இதனால் வன்முறைகள் அதிகரித்துச்செல்கின்ற சூழல் உருவாகின்றது.
இதேபோன்று வெளித்தோற்றத்திற்கு ஒழுக்கமாக இருப்பது போல் பேசுவோம். ஆனால் ஆனால் உள்ளெண்ணத்தில் சமயங்கள் ஒழுக்கம் பற்றி கூறியிருக்கின்ற விடயங்கள் பற்றிய தெளிவற்றவர்களாக காணப்படுகின்றோம்.
இப்படியாக வன்முறைகளை குறைப்பது பற்றிய மிக ஆழமான வேலைத் திட்டங்களையும் செயற்திட்டங்களையும்; பற்றி சிந்திக்கவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.
இலங்கை எதிர்நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சனை வீட்டுவன்முறை,பாலியல் வன்முறை,பாலியல் துஷ்பிரயோகம் என்பவையாகும். ஆண்,பெண் சமத்துவமற்ற விடயமாகும். இந்த நிலைமைகளை எதர்கொள்வதற்கு இவ்வாறான வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக எங்கள் சமூகம் என்ன நினைக்கின்றது என்றால் இவை அரசார்பற்ற நிறுவனங்களின்; வேலை. அவர்களுக்கு பணம் வருகின்றது, அதனால் இதை செய்கின்றார்கள். அரச அதிகாரிகளுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வருகின்றது, எனவே அவர்கள் இதை செய்கின்றார்கள் என்ற மனோநிலையிலிருந்து இந்த சமூகத்தை வெளியேற்ற வேண்டும். இது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
நான் எவ்வாறு சுயமரியாதையும் கௌரவமும் கொண்ட ஒரு மனிதனாக இந்த சமுதாயத்தில் வாழ்கின்றேனோ அதேபோல் எனது வீட்டிலிருக்கின்ற எனக்குப் பக்கத்தில் இருக்கின்ற பெண்ணும் சுயமரியாதையும் கௌரவமும் கொண்டவர் என் மனோநிலையை நாம் எப்போது உருவாக்குகின்றோமோ அப்போதுதான் வன்முறையை நாட்டிலிருந்து ஒழிக்க முடியும். அந்த மனோநிலை மாற்றத்திற்காக கூடுதலாக பேசவேண்டிய தேவை இருக்கின்றது.
இந்நாட்டில் வடக்கிலிருக்கின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, கணவன்மாரை இழந்த, உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான சகோதரிகள் கண்ணீர்விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களிடம் நாங்கள் பேசுகின்றபோது அதிர்ச்சிகரமான தகவல்களும் நாங்கள் எதிர்பார்க்காத தகவல்களும் அவர்களிடமிருந்து வெளிவந்தன. இவைகளுக்குப்பின்னால் பெண்கள் பற்றிய பிழையான கருதியல்களும் மனப்பாங்கும் அவர்களை மிக இலகுவாக உணர்ச்சியூட்டி தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என நினைக்கின்ற எதேச்சைக்கார சக்திகளின் நிலைப்பாட்டிற்கு ஆயிரக்கணக்கான சகோதரிகள் கண்ணீர்வடிப்பதை காணலாம்.
இன்று எல்லா நினைகளில் பெண்களை இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற மனோநிலை மேலோங்கிவருகின்றது.பெண்களுக்கு பலவீனமான மனோநிலை சமூகத்தில் மேலோங்கியுள்ளது.இதனையுடைப்பதற்கு நாங்கள் ஓருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிவருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏன் குடும்ப வன்முறைகள் நடைபெறுகின்றது என்பதை நாங்கள் விஞ்ஞான ரீதியாக ஆய்வுசெய்யவேண்டும்.
இந்த மாவட்டத்தில் ஏற்பட்டுவரும் கலாசார சீரழிவுகள் சிறிய சிறிய கிராமங்களில் தாக்கங்களுக்கு உட்பட்டுவருகி;றது.அங்குள்ள சகோதரிகளை வன்முறையில் இருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த நாங்கள் பேசவேண்டியுள்ளது. குடும்ப வாழ்க்கையினை அனைத்து சமயங்களும் முக்கியமான விடயமாக குறிப்பிட்டுள்ளது.குடும்ப வாழ்கையின் தார்ப்பரியங்களை புரியாமல் திருமணங்கள் நடைபெறுகின்றன' என்றன.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago