Suganthini Ratnam / 2016 நவம்பர் 29 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
இலங்கையில் சிங்கள மொழியை அரச கரும மொழியாக அறிமுகப்படுத்தியதை அடுத்து நாட்டில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டபோது, அவ்வாறான பிரச்சினை சிங்கப்பூரில் வந்துவிடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அங்குள்ள நான்கு மொழிகளையும் அரச கரும மொழிகளாகப் பிடகடனம் செய்தார். அதை அடுத்து அந்த நாட்டு மக்கள் ஐக்கியத்துடன் செயற்பட்டமை சிறந்த வரலாற்றுப் பாடமாகும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தொரிவித்தார்.
இலங்கையில் இளைஞர்களை அடக்குவதற்கு ஆயுதங்களைப் பயன்படுதியபோது சிங்கப்பூர் இலங்கை இளைஞர்களுக்கும் வேலைவாய்பு வழங்கக்கூடிய வகையில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் இங்கிருந்த இளைஞர்கள் அங்கு சென்றார்கள் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு - வாகரையில் நடைபெற்ற இளைஞர் பயிற்சி முகாமில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (28) மாலை நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் இலங்கையில் கல்வி பயின்ற காலப்பகுதியிலேயே இலங்கை சுதந்திரமடைந்தது. அவர் அரசியல் துறையில் அபிலாஷை கொண்டவர். அவர் தனது நாட்டை அபிவிருத்திப் பாதையில் நகர்த்திச் செல்வது எவ்வாறு என்று இலங்கையின் நடவடிக்கைகளைப் பாடமாகக் கொண்டு யோசித்தார். அதற்கு இலங்கை இடராக அமையும் என்றும் சிந்தித்தார்.
அப்போது இலங்கையின் மக்கள் மூளைசாலிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் இருந்தார்கள். நாட்டில் சகல வளங்களும் இருந்தன. இதன் அமைவிடமும் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த ஸ்தானத்தில் இருந்தது. இலங்கை வேகமாக முன்னேறும்போது சிங்கப்பூரை கட்டியெழுப்பலாமா என்றும் சந்தேகித்தார்.
ஆனால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தேசிய இயக்கங்கள் தோற்றம் பெற்று பின்னர் அவ்வியக்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்தபோது பெரும்பான்மை மக்களுக்குரிய திட்டங்களை மாத்திரம் முன்வைத்து குறுக்குப்பாதையில் செல்வதை லீ குவான் யூ அவதானித்தார். அதன்பின்னரே இனிமேல் சிங்கப்பூரை முன்னேற்றப்பாதையில் கொண்டுவரமுடியும் என்பதை உணர்ந்தார்.
இலங்ககையின் நிருவாக மொழியாக சிங்கள மொழியை அறிவித்ததன் காரணமாக நாடு இரண்டுபட்டது. நாட்டு மக்கள் இரண்டு அணிகளாக அரசியல்துறையில் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டிய சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு பெரும்பான்மை சிந்தனையோடு கொண்டுவரப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுபவர்களை நசுக்கி அழித்து நாசமாக்குகின்ற யுத்திகளைக் கையாள்வதில் அரசு காலத்தை செலவிட்டது. இதன் காரணமாக நாட்டின் வளங்கள் சிதறடிக்கபட்டதுடன் இளைஞர் வளம் தகுந்த முறையில் செப்பனிடப்படாது போனது.
1960 பிற்காலப் பகுதியில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என கோரியபோது வேலைவாய்ப்புக்களைக் கொடுக்குமளவிற்கு சரியான மூலோபாயங்களை வகுத்துக்கொள்ளாத அரசாங்கம் வேலைவாய்ப்புக்களை வழங்காததால் இந்த இளைஞர்கள் எதிராக சிந்திக்கத் தொடங்கினார்கள்.; இதன்காரணமாக தென்பகுதியில் (செக்குவரா) சிங்கள விடுதலை இயக்கம் உருவாகியது. இதேபோன்ற இதர காரணங்களினால் வட கிழக்கிலே எழுந்த எழுச்சியை அடக்குவதற்கு ஆயுதங்களைப் பயன்படுத்தப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் ஆட்சி மற்றும் நிருவாகம் என்பன போன்ற விடயங்களில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றோம். இளைஞர்களுக்கு திட்டமிட்டு தொழிவாய்ப்பைத் வழங்கக்கூடியவகையில் மாகாண சபையில்கூட அதிகாரம் இல்லை பலமும் இல்லை.
எனினும் மத்திய அரசும் மாகாண சபையும் இணைந்து செயற்படக்கூடிய இயல்புநிலை தற்போது தோன்றியுள்ளது. ஆனால் வரவு- செலவுத்திட்டதில் மாகாண சபைகளுக்குரிய சரியான பங்கீடு செய்யப்படவில்லை என்ற குறைபாடுகளும் இருக்கின்றன. மாகாணசபைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். அப்போது எங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திகளை நாங்கள் திட்டமிட்டுச் செய்வோம்' என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago