2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பிரதேச செயலாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபை செயலாளரை இடமாற்றுமாறு கோரி அப்பிரதேச சபையின் சில ஊழியர்கள் பிரதேச சபைக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சக ஊழியர்களை இப்பிரதேச சபைச் செயலாளர் மதிக்காமல், தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துச் செயற்படுவதாகவும் இச்செயலாளருக்கு கீழ் தங்களினால் கடமை செய்ய முடியாதெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

பிரதேச சபைச் செயலாளருக்கும் அங்கு கடமையாற்றும்  தங்களுக்கும் இடையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கருத்து முரண்;பாடு நிலவி வந்தமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோருக்கு எழுத்து மூலம் தெரிவித்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேலிடம் வினவியபோது, 'ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் சபை செயலாளருக்கும் இடையில் நிலவி வந்த முறுகல் நிலை தொடர்பாக கடந்த வாரம் தனக்கு எழுத்து மூலம் கிடைத்தது.  இது தொடர்பில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவரின் பதில் கிடைப்பதற்கு முன்னர் பிரதேச சபை ஊழியர்கள் கடமைக்கு சமுகமளித்து தினவரவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டு விட்டு அலுவலகத்துக்கு வெளியில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை  தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X