2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பிரத்தியேக வகுப்புகளை இடைநிறுத்துமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இம்மாதம் 15ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை காத்தான்குடிப் பிரசேத்தில் தரம் -01 முதல் தரம் -11வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை இடைநிறுத்துமாறு காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரத்தியேக வகுப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மேற்படி சம்மேளனம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

மேற்படி சம்மேளனத்தின் தலைவர் எம்;.எம்.தௌபீக், செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி ஆகியோர் கையொப்பமிட்டு திங்கட்கிழமை (05) அறிக்கை  வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  '2016ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை முடிந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு போதிய ஓய்வு வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

விடுமுறையின்போதும் மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதால், மன உளைச்சலுக்கு  ஆளாவதாக எமக்குப் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே, குறித்த காலப்பகுதியில் பிரத்தியேக வகுப்புகளை இடைநிறுத்தி மாணவர்கள் விடுமுறையைச் சந்தோஷமாகக் கழிப்பதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X