Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெற்றோர்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்க்க வேண்டுமென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாபா நல்மா ஹம்சா தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை காலை காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் நடைபெற்ற மாணவிகளுக்கான தலைமைத்துவ செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே சல்மா ஹம்சா மேற்கண்டவாறு கூறினார்.
இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சல்மா ஹம்சா,
ஆண் பிள்ளைகளை ஒருவாறும் பெண் பிள்ளைகளை ஒருவாறும் பார்த்து அவர்களை வளர்க்கும் போது இளமையிலேயே பிள்ளைகளின் உள்ளம் பாதித்து விடும். அதனால் பிள்ளைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு விடுவார்கள்.
சிறுபிராயத்திலிருந்தே நல்லிணக்கமும் ஐக்கியமும் ஒற்றுமையும் சகோதரத்துவமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் இந்த நல்லிணக்க வேலைத்திட்டம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறான செயற்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.
தமிழ், முஸ்லிம் சிங்கள மாணவர்கள் மத்தியில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமாக இவ்வேலைத்திட்டமுள்ளது.இச் செயலமர்வு மூன்று தினங்களுக்கு இடம்பெறும்.
பெண்கள் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க கூடியவர்களாக மாறவேண்டும்.இயலாதவர்களாக பெண்கள் காணப்படக் கூடாது என்றார்.
இந்த செயலமர்வில் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலை,மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலை மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்தச் செயலமர்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.அஸீஸ்,காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago