2025 மே 26, திங்கட்கிழமை

‘பிள்ளையானை ஆஜர்படுத்த தேவையில்லை’ : மேல் நீதிமன்றம் உத்தரவு

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உட்பட நால்வரையும் எதிர்வரும் காலத்தில் நீதிவான் நிதிமன்றுக்கு அழைத்துவர தேவையில்லை என, மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

நேற்று நீதிவான் நீதிமன்றத்துக்கு பிள்ளையான் அழைத்துவரப்படவிருந்த நிலையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தெரிவித்தார்.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதனால், மேல் நீதிமன்ற வழக்கின் போதே அவர்களை அழைத்துவரும் படி, மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X