Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பிள்ளையான் தலைமையிலான கிழக்கு மாகாண சபை ஆட்சி காலத்தில் பெண்களுக்கு காணிச்சட்டத்தில் சமவுரிமை வேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்ட வரைவை அங்கீகரிக்காது கிடப்பில் போட்டு தட்டிக் கழித்ததன் மூலம் பெண்களுக்குத் துரோகமிழைக்கப்பட்டது என ஓய்வு பெற்ற காணி ஆணையாளரும் காணிச் சட்ட ஆலோசகருமான கே.குருநாதன் தெரிவித்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும் எழுத்தாளரும் சமூக சேவையாளருமான அமரர் சாந்தி அனுஷா சச்சிதானந்தத்தின் 40ஆவது நாள் நினைவஞ்சலி நிகழ்வு மாவெடிவேம்பு பொதுஜன அபிவிருத்தி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை(06) மன்ற திட்ட இணைப்பாளர் கே. விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த 30 ஆண்டு கால கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது கணவன்மாரை இழந்த 86 ஆயிரம் விதவைகளின் நெஞ்சங்களில் அமரர் சாந்தி சச்சிதானந்தம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
பிற்படுத்தப்பட்ட பெண்களினதும் சிறுமிகளினதும் குறிப்பாக விதவைகளினதும் விடிவுக்காக சதாவும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர் அமரர் சாந்தி.
யுத்தத்திழனால் பாதிக்கப்ட்ட பெண்களின் காணி உரிமைகள் சம்பந்தமாக அவர் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டார்.
காணிச் சட்ட சீர்திருத்தத்ததை மேற்கொண்டு பெண்களுக்கும் காணி உரிமை உண்டெனும் வரைவை மாகாண சபைகளுக்குக் கொண்டு வருவதற்கு சாந்தி முயற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது இயங்கிய எட்டு மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் பெண்களுக்கான காணிச் சமவுரிமையை ஏற்றுக் கொண்டன.
ஆனால் துரதிஷ்ட வசமாக பிள்ளையான் தலைமையிலான கிழக்கு மாகாண ஆட்சி காலத்தில் இந்த வரைவுச் சட்டத்தை அங்கீகரிக்காமல் பிள்ளையான் பெண்களுக்கு துரோகமிழைத்து விட்டார் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago