Niroshini / 2015 நவம்பர் 08 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த இரண்டு தினங்களாக காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் தமது மாட்டு இறைச்சிக் கடைகளை மூடி நடத்திய பகிஸ்கரிப்பு நடவடிக்கையினை இன்று ஞாயிற்றுக்கிழமை கைவிட்டு தமது இறைச்சிக்கடைகளை திறந்துள்ளனர்.
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை(06) காத்தான்குடி நகர சபையின் மாடு அறுக்கும் மடுவத்தில் தமக்கு மாடு அறுக்கும் போது அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அதனை தீர்த்து தருமாறும் கோரியே இவர்கள் இந்த பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இவர்களின் இந்த பகிஸ்கரிப்பினால் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொதுச் சந்தை மற்றும் புதிய காத்தான்குடி சந்தை, புதிய காத்தான்குடி சந்தை உட்பட காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள 23 மாட்டு இறைச்சிக்கடைகளும் கடந்த இரண்டு தினங்களும் மூடப்பட்டிருந்தன.
இதையடுத்து, காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் மற்றும் அதிகாரிகளுக்கு காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்குமிடையில் கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை காத்தான்குடி நகர சபை கட்டடத்தில் நடைபெற்றது.
இதன்போது, எட்டப்பட்ட முடிவையடுத்து தமது பகிஸ்கரிப்பை கைவிட்டு தமது கடைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துள்ளனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025