2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

6 பசுக்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, கரடியனாறுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனைக் கிராமத்தில் 06 பசு மாடுகளைக் கடத்திக்கொண்டு  சென்றதாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (13) இரவு பொலிஸார்  கைதுசெய்துள்ளதுடன், வாகனத்துடன் அப்பசு மாடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, தேடுதல் மேற்கொண்டபோது, அனுமதிப்பத்திரமின்றி மாவடியோடைக் கிராமத்திலிருந்து ஏறாவூர் நகரப் பகுதிக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பசுக்களை கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X